திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழக வேத பாடசாலையில் தங்களது இன்னல்களை போக்க பாராயணம் பாடி பிரார்த்தனை செய்த சிவாச்சாரியார்கள். 
தமிழகம்

சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாத இடையூறு: பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் வேதனை

செய்திப்பிரிவு

சிவாலய பூஜைகளில் சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாதஇடையூறு ஏற்படுத்துவது மனவேதனை அளிக்கிறது என பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழக வேத பாடசாலையில் தங்களது இன்னல்களை போக்கவும், நினைத்த காரியம் கைகூடவும் கற்பக விநாயகரிடம் அதர்ம சீரிச மந்திர பாராயணம் பாடி80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கூறியதாவது:

பரம்பரை, பரம்பரையாக பலநூற்றாண்டு காலமாக சிவாச்சாரியார்கள் சிவாலயங்களில் பூஜைசெய்து வருகின்றனர். நாங்கள்யார் மீதும் வெறுப்பு காட்டியதும் இல்லை. யார் மனதையும்புண்படும் அளவுக்கு பேசியதும்இல்லை. வறுமையில் வாழ்ந்தாலும், வளமாக இருந்தாலும் இறைவன் மீது பற்று நீங்காதவர்களாக உள்ளோம்.

சிவாலய பூஜைகளில் பல நூற்றாண்டுகளாக ஆதிசைவர்கள் தவிர மற்றவர்கள் ஈடுபட்டது கிடையாது. மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் தேவையற்ற இடையூறு, குழப்பம் உண்டாக்குவதுமன வேதனையைத் தருகிறது. நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல, மற்ற மதங்களோடு வம்பு செய்வதும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT