பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா திட்டக்குடியில் நிருபர் களிடம் பேசியதாவது:
பாஜக சார்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் கேந்திர கூட்டம் நடத்தி முடிக்கப்படும். மாநிலம் முழுவதும் 6 யாத்திரைகள் தொடங் கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர, ஒன்றி யங்களில் தேர்தல் பிரச்சாரத்தை யாத்திரை மூலம் தொடங்க உள் ளோம்.
வாக்காளர் பட்டியலில் நடை பெறும் முறைகேடுகளை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கெயில் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸூம், திமுக அரசும்தான் என்றார்.