தேமுதிக, தமாகா தலைவர்களிடம் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் பொருத்த மான பதில்களைக் கூறுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் உ.வாசுகி கூறியதாவது: தேர்தல் வரும் நேரத்தில் 110 விதியின் கீழ் பல திட்டங்களை முதல்வர் அறிவித் துள்ளார். அது வெறும் வாய் வார்த் தைதான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. திமுகவும் அந்த இடத்தை நிரப்பும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை.
தமிழகத்தை திமுக, அதிமுகவின் சொந்த சொத்தாக மாற்றியது போதும். அதில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் நலக் கூட்டணி தோன்றியுள்ளது. தேர்தல் ரீதியாக அதை வலுப்படுத்த தேமுதிக, தமாகா தலைவர்களிடம் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் பொருத்த மான பதில்களைக் கூறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆகவே மக்கள் நலக் கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றார்.