பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

80 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

செய்திப்பிரிவு

80 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 044-2538 4520, 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு கரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துகொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த சிறப்பு கவனம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT