சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வரும் எம்.எம்.சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள் ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிமற்றும் நீதிபதி என்.கிருபாகரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது மூத்த நீதிபதியாக பதவி வகிப்பவர் எம்.எம்.சுந்தரேஷ்(59).
கொலீஜியம் பரிந்துரை
இதில் என்.கிருபாகரன் நேற்று டன் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்ட 9 பேரைஉச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான கொலீஜியம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் விரைவில் இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்படுவார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கடந்த 1962 ஜூலை 21-ம் தேதிஈரோட்டில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஈரோட்டில் முடித்த இவர்,சென்னை லயோலா கல்லூரியில்பிஏ பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பை மெட்ராஸ் சட்டக்கல்லூரியிலும் முடித்துள்ளார். 1985-ம்ஆண்டு வழக்கறிஞராகப் பதிவுசெய்த இவர், 1991-96 காலகட்டத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் அதிக அனுபவமிக்கவர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.எம்.சுந்தரேஷ், 2011-ம் ஆண்டுநிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்படவுள்ளார்.