தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பெண்கள் போட்டியிட அதிக தொகுதிகள் கேட்டு பெறுவோம் என்று மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நேற்று அவர் கூறும்போது, ‘ தமிழகம் முழுவதும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் அதிமுக அரசு விளம்பர அரசாக உள்ளது. இலவசங்கள் வழங்காமல் மக்களை முன்னேற்றம் அடைய செய்யும் அரசு வேண்டும். மத்திய அரசானது சுற்றுப்பயணம் செய்யும் பிரதமரை கொண்ட அரசாக உள்ளது.
2020-ல் தான் புதியதாக ரயில்கள் அறிவிக்கப்படும் என, ரயில்வே அமைச்சர் கூறுகிறார். ராகுல்காந்தி பிரதமரான பின் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் வந்து சேரும். சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் பெண்கள் போட்டியிட அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்றார் அவர்.