மகாராஷ்டிராவில் இருந்து வந்த 6.93 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அதை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். படம்: க.பரத் 
தமிழகம்

மகாராஷ்டிராவில் இருந்து 6.93 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் இருந்து 6.93 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துவழங்கி வருகிறது. கரோனா தொற்று 3-வது அலை விரைவில் பரவும் என்று கூறப்படுவதால் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு 79 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 6.93லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று வந்தன.

விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்புகிடங்குக்கு கொண்டு சென்றனர்.

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மருந்து கிடங்குக்குவந்து, தடுப்பூசிகளை பார்வையிட்டனர். இதையடுத்து, தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்துஅனுப்பப்பட்டன.

அதேபோல, சென்னை வந்த3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ளமத்திய அரசின் மருந்துக் கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டன.

SCROLL FOR NEXT