கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போர் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 70 லட்சத்து 30,345 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 4.29 லட்சம் பேர் பிஏ பட்டதாரிகள். 6.17 லட்சம் பேர் பிஎஸ்சிபட்டதாரிகள். 3.11 லட்சம் பேர் பிகாம் பட்டதாரிகள். பிஎட் முடித்தபட்டதாரிகள் 3.42 லட்சம் பேர். பிஇ, பிடெக் பட்டதாரிகள் 2.71லட்சம் பேர், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 1.78லட்சம் பேர் உள்ளனர்.