கோவையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், உக்கடம் - ஆத்துப்பாலம் சாலைமுக்கியமானது. கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக் கும், கேரள மாநிலத்தின் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்வதற்கு இச்சாலை முக்கிய வழித்தடமாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி கடந்த2018-ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறையால் தொடங்கப்பட்டது. மொத்தம் 1.970 கிலோ மீட்டர்தூரத்தில், ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகேயிருந்து உக்கடம் -செல்வபுரம் பைபாஸ் சாலையில் ‘யூ டர்ன்’ வடிவில் திரும்பும் வகையிலும், மற்றொரு வழித்தடம் நாஸ் திரையரங்கு அருகே செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
கரும்புக்கடை முதல் உக்கடம் வரை நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகின்றன. அடுத்து,செல்வபுரம் பைபாஸ் சாலையில் ‘யூடர்ன்’ வடிவில் இறங்கும் தளம்அமைக்கும் பணி தாமதமாகியுள் ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டப் பணி கிடப்பில் போடப்பட்டதாக எழுந்த புகாருக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திட்ட வடிவம் மாற்றம்
மாநில நெடுஞ்சாலைத் துறையின் உயரதிகாரி ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் 2 கட்டங்களாக மேம்பாலம் கட்டப்படுகிறது. பணி தொடங்கப் பட்டபோது இருந்த திட்ட வடிவில்,சில மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன. முன்பு கரும்புக்கடையில் இருந்து நாஸ் திரையரங்கு அருகே பாலம் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. தற்போது அது நீக்கப்பட்டு, உக்கடம் பேருந்து நிலையவளாகத்தில் இறங்கும் வகையிலும்,உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையில் இறங்கி, ஏறும் வகையிலும் திட்டவடிவம் மாற்றப்பட்டுள்ளது. ஆத்துப்பாலத்தின் சுங்கச்சாவடியுடன் முடிவடைவதாக இருந்தபாலம், பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலை வரை இருபுறமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் சில மாதங்கள் பணிகள் தாமதமாகின. 80 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. உக்கடம் சி.எம்.சி காலனி மற்றும் அதற்கருகே இடம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இரண்டாவது, உக்கடம் குளக்கரையில் இருந்து வரும் உயர் அழுத்த மின் கம்பிகளை தரைவழியாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் முதல்கட்ட பாலம் பணி முழுமையாக முடிந்து விடும்.
இரண்டாவது கட்ட பாலம் பணி1.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.265 கோடி மதிப்பில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதற்காக 73 தூண்கள், 62 தாங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில்20 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள் ளன.
உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி முடிப்பதற்கான காலக்கெடு 2023-ம் ஆண்டு ஜூலை வரைஇருந்தாலும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட் டுள்ளன. முதல்கட்டமாக பொள்ளாச்சி சாலை அல்லது பாலக்காடுசாலையில் இறங்கும் வழித்தடங் களில் ஏதேனும் ஒன்று முடிக்கப்பட்டு விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.