விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு.வெங்கடேசன் ஆகியோரை இன்று (6-ம் தேதி) மாலை வரை சிபிசிஐடி போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து 4 பேரிடமும் தனித்தனியாக சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். இந்நிலையில், கல்லூரி தாளாளர் வாசுகி நேற்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். எனவே, நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு அவரை முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு போலீஸார் அழைத் துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் கண்ணன், பாபு உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
வாசுகிக்கு நெஞ்சு வலி, வயிறு வலி, கால் வலி, முதுகு வலி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மாலை 4 மணிக்கு வாசுகியை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சீனியம் மாள், எஸ்ஐ ராஜா உள்ளிட்ட போலீஸார் அழைத்துச் சென்றனர். இன்று (6-ம் தேதி) மாலை 5 மணியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதால் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத் தில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.