திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் சவுந்தர்யா. 
தமிழகம்

ரஜினி மகள் சவுந்தர்யா திருச்செந்தூரில் தரிசனம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகளும் திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் நேற்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். கோயிலில் நடைபெற்ற அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, சுமார் 2 மணி நேரம் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, கோயில் யானை தெய்வானைக்கு பழங்கள், வெல்லம் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கரோனா ஊரடங்கால் இன்று முதல் 3 நாட்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்பதால், நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள், சவுந்தர்யா வந்திருப்பதை அறிந்து ஆர்வமுடன் அவரை வேடிக்கை பார்த்தனர்.

SCROLL FOR NEXT