தமிழகம்

எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை அரசு கல்லூரியில் இடம்: சிறப்பு கலந்தாய்வு பிப்.10-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி யில் படித்த மாணவர்களை, சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 10-ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக இந்திய மருத் துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் இயங்கி வந்த எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி யில் பயின்று வரும் மாணவர் களை முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரிக்கு உடனடியாக மாற்ற வேண்டியுள்ளது. இதற்கான சிறப்பு கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

எஸ்விஎஸ் கல்லூரியில் கடந்த 2008-09 முதல் 2014-15 கல்வியாண்டுகளில் இணைந்து, தங்கள் பெயரை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து படித்துக் கொண்டிருப்ப வர்கள், இந்த சிறப்பு கலந்தாய் வில் பங்குகொள்ள தகுதியுடை யவர்கள். மேலும், 2015-16ம் கல்வியாண்டில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல் கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இருக்கை விவர அடிப்படையில், இந்த ஆணையரக தேர்வுக்குழு வால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணைப்படி, எஸ்விஎஸ் கல்லூரி யில் இணைந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

சிறப்பு கலந்தாய்வுக்கு வரும் போது, கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆளறி சான்றிதழ் மற்ற ஆவணங்கள், மாணவரின் பெயர், புகைப்படம் இடம்பெற்ற ஏதேனும் ஒரு அசல் ஆளறி சான்றிதழ், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் தேர்வுக் கான நுழைவுச் சான்றிதழ், எஸ்விஎஸ் கல்லூரியால் வழங்கப் பட்ட கல்விக் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வுக்குழு அலுவலகத்தை 044-2621 6244 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT