தமிழகம்

மக்கள் நலக் கூட்டணியை பிரிக்க சதி: மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மக்கள் நல கூட்டணியை பிரிக்க சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் சிங்காரவேலர் சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கடலூர் மற்றும் சிதம்பரத்தில் நேற்று முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நல கூட்டணி இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடக்கி வைத்தார். குறைந்தபட்ச செயல் திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள் ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி மற்றும் கடலூர் கூட்டங் களில் வைகோ பேசியதாவது: ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க வேண் டும் என்ற நோக்கத்தில் மக்கள் கூட்டணி உருவாக்கப்படவில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சி களிடம் இருந்து மக்களை காக்க வும், ஊழலை ஒழிக்கவும் உருவாக் கப்பட்டது. மக்கள் நல கூட்டணியை கண்டு அவர்கள் அச்சம் கொண்டி ருப்பதால்தான் எங்களை பிரிக்க சதி செய்கின்றனர்.

மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் திமுக, அதிமுக ஆட்சி யின்போது ஊழலில் ஈடுபட்டவர் களின் சொத்துகள் பறிமுதல் செய் யப்பட்டு மக்கள் சொத்தாக அறிவிக்கப்படும். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்கள் நல கூட் டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது புதுச்சேரியின் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது, ‘‘மக்கள் நல கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் முதல்வர் யார் என கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வர். முதல்வர் பதவிக்காக எவரும் ஏங்கவில்லை. தலித் ஒருவர் முதல்வராக கூடாதா என கேள்வி எழுப்புவதில் தவ றில்லை. முதல்வர் பதவி வேண் டும் என்றால் கூட்டணி கட்சி தலை வர்களிடம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. இதனால் எங்க ளுக்குள் எவரும் குழப்பத்தை உருவாக்க முடியாது. உத்தரபிர தேசம், மகாராஷ்டிரா, பீகாரில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் முதல்வராக முடிகிறது. தமிழகத் தில் அவ்வாறு செய்ய திமுக, அதிமுக தயாரா?. மாற்று அரசியல் என்பது விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அதிகார பகிர்வு என்பதுதான்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: திமுக தலைவர் குடும்பமே ஊழல் வழக்கை சந்தித்து வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளர் மீதே ஊழல் வழக்கு உள்ளது. இருவரும் தண் டனை பெற்று சிறைக்கு செல்ல வேண்டியவர்கள். மதுரை கிரானைட் கொள்ளை இரு கட்சிகளின் ஆட்சியின்போது நடை பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் தனியார் கல்லூரியில் 3 மாணவிகள் இறந்ததற்கு கார ணம் கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு இல்லாததே. அதற்கு அனுமதி வழங்கியதில் திமுக, பாமக, அதிமுகவுக்கு பங்கு உள்ளதால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.

SCROLL FOR NEXT