தமிழகம்

மத்திய அரசிடம் கூடுதல் வெள்ள நிவாரணத் தொகை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்: வாசன்

செய்திப்பிரிவு

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.1,774 கோடி போதுமானதல்ல. கூடுதல் தொகையைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெரு மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு வணிகர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.1,774 கோடி போதுமானதல்ல. கூடுதல் தொகையைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT