தமிழகம்

திமுகவில் 11 நாட்களில் 3,000 விருப்ப மனுக்கள் விநியோகம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 11 நாட்களில் 3 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப் ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக் கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. எனவே, வாக்குச்சாவடி குழுக்கள் அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனுக்கள் பெறுதல் என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுகவில் கடந்த 24-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோ கிக்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 10-ம் தேதி வரை மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.1,000. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனித் தொகுதி, பெண்கள் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

கடந்த 11 நாட்களில் சுமார் 3 ஆயிரம் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 1,000 மனுக்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாக திமுக அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தேய்பிறை என்பதாலும், கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருப்பதாலும் விருப்ப மனுக்களை அளிப்பதில் பலர் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

அஷ்டமி, நவமியான பிப்ர வரி 1, 2 தேதிகளில் மிகக் குறைந்த அளவே மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகூர்த்த நாளான நேற்று 300-க்கும் அதிகமானோர் விருப்ப மனு பூர்த்தி செய்து அளித்துள்ளனர். அமாவாசை தினமான வரும் 8-ம் தேதிக்கு பிறகு அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்களை அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT