பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட மீரா மீதுனின் யூடியூப் பக்கத்தை முடக்க பரிந்துரை கடிதத்தை யூடியூப் நிர்வாகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பியுள்ளனர்.