தமிழகம்

கோடநாடு கொலையில் தொடர்பில்லையெனில் அதிமுகவினர் அச்சப்பட தேவையில்லை: திருமாவளவன் எம்பி பேட்டி

செய்திப்பிரிவு

கோடநாடு கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை எனில் அதிமுகவினர் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: அனைத்துச் சாதியி னரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் கனவை தமிழக அரசு நனவாக்கி உள்ளது.

சுப்பிரமணிய சுவாமி போன்றோர் சமூக நீதியை விரும்பாதவர்கள். இந்துக்கள் அல்லாதோர் அர்ச்ச கரானால் இவர்கள் கோபப்படுவது நியாயம். இந்துக்கள் அனைவரும் கருவறைக்குள் நுழைவதால் எரிச்சல் அடைகிறார்கள்.

கோடநாடு கொலை வழக்கில் அதிமுகவினர் மீது குற்றமில்லை என்றால் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்ன தாக இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்த இரு விசிகவினர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

SCROLL FOR NEXT