சென்னையில் தலைக்கவசம் அணி யாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 100 பேருக்கு தமிழக டிஜிபி அசோக்குமார் இலவச தலைக்கவசங்களை வழங்கினார்.
தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பூந்தமல்லி சாலை அண்ணா வளைவு அருகில் தமிழக டிஜிபி அசோக்குமார் இருசக்கர வாக னங்களில் தலைக்கவசம் அணி யாமல் வந்தவர்களுக்கு தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அப் போது 100 இருசக்கர வாகன ஓட்டி களுக்கு இலவசமாக தலைக் கவசங்களை வழங்கினார். சாலை களில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, விபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலி யுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் இணை ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி, துணை ஆணையர் (மேற்கு) எஸ்.பன்னீர்செல்வம், உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.