தமிழகம்

தமிழகத்துக்கு இனி நல்ல காலம்: ராமதாஸ் கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு இனி நல்ல காலம் வரப்போகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் வரைவு அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு அருகே எச்சூர், வடதண்டலம், தவசி மற்றும் வெம்பக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னாள் எம்பி மு.துரை தலைமை வகித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “எச்சூர் கிராமத்தில் இருந்து பாமக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கி உள்ளேன். அதிகாலை நேரத்தில் குடுகுடுப்பைக்காரர் சொல்வதுபோல் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல் கிறேன். தமிழகத்தை பிடித்திருந்த அதிமுக என்ற கிரகம் விலகி, ஆட்சிக்கு பாமக வரப்போகிறது. தமிழகத்துக்கு இனி நல்ல காலம்.

தமிழகத்தில் மட்டும் மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர். தாலியை இழந்து பெண்கள் தவிக்கின்றனர். ஆனால், மதுவை விற்பனை செய்து தாலிக்குத் தங்கம் வழங்குகிறார்கள். அதிமுகவும் திமுகவும் குடிக்கச் சொல்கின்றன. பாமக மட்டும்தான் படிக்க வேண்டும் என்கிறது. ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். உயர்கல்வி வரை கட்டணம் இல்லாத இவசக் கல்வியை வழங்குவோம். தரமான இலவச சிகிச்சை அளிக்கப்படும். விவசாய இடுபொருட்கள் வழங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT