டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

நீண்ட காலம் மக்கள் பணி: கேஜ்ரிவால் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஆக. 16) தனது 54-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "எனது இனிய நண்பரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT