தமிழகம்

எம்ஜிஆர், கருணாநிதி போல் கோரிக்கையை ஜெ. நிறைவேற்ற வேண்டும்: குமரிஅனந்தன் விருப்பம்

செய்திப்பிரிவு

`முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் போல், எனது கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும்’ என, மதுவிலக்கு நடைபயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்த, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி கடந்த டிசம்பர் மாதம் 25 ம் தேதி சென்னையில் இருந்து நடைபயணத்தை குமரிஅனந்தன் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து வந்த அவர், கன்னியாகுமரி கடலில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட நாளான (பிப்ரவரி 12) நேற்று காந்தி மண்டபத்தில் நிறைவு செய்தார்.

நடைபயணத்தில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி.க்கள் ஹெலன்டேவிட்சன், ஆஸ்டின், மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், சமக மாவட்டச் செயலாளர் அரசன் பொன்.ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குமரி அனந்தன் கூறியதாவது:

கன்னியாகுமரியில் எனது கோரிக்கையை ஏற்று காமராஜர் மணி மண்டபத்தை கருணாநிதி கட்டினார். எனது கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்துக்கு எம்ஜிஆர் ஏற்பாடு செய்தர். அதே போல் மதுவிலக்கு கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT