தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல் படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டேவிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று வெளியிட்டஅரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அரசு சேவை மையங்களின் வலையமைப்பை பயன்படுத்துவதன் மூலம் அரசு வழங்கும் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்கிறது. இப்பணிகளில் அரசுக்கு ஆலோசனை வழங்க, இத்துறையில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.