தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் தருமபுரியில் அஞ்சல்துறை சார்பிலான ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘தாங்கள் தற்போது திறந்து வைத்த ஏடிஎம் மையத்தின் எதிரில் 20 அடி தூரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துக் கொண்டு நேராக மதுக்கடைக்கு செல்லும் நிலை ஏற்படுமே’ என்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ‘இன்னும் 2 மாதங்கள் தானே இருக்கு. அதன் பின்னர் பாமக ஆட்சி அமைய உள்ளது. உடனே மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து இடப் போகிறோம். அந்த மதுக்கடை உட்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு விடுமே’ என்றார்.