சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை இளைய சமுதாயத் தினர் தெரிந்து கொள்ள தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.
கடலூரில் பாஜக மகளிரணி சார்பில் நேற்று நடைபெற்ற சுதந் திரதினவிழாவில் கலந்து கொண்ட பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியது:
75-வது சுதந்திர தினத்தை முன் னிட்டு நாடு முழுவதும் 75 சுதந்திர போராட்ட வீராங்கனைகளை சிறப்பிக்கும் நிகழ்வை பாஜக மகளிரணி முன்னெடுத்தது. அந்தவகையில், தமிழகத்தில் சிவகங் கையில் வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, கடலூர் அஞ் சலை அம்மாள் ஆகியோரை சிறப்பு செய்தோம். சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முதல் வருக்கு கோரிக்கை வைக்கிறோம். தியாகிகளின் தியாகம் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
திமுக தனது அரசியலுக்கும், தேர்தல் வெற்றிக்காகவே தேர்தல் வாக்குறுதியை வழங்கியது. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை.ஆட்சி அமைத்த பிறகு நிதி நிலைமை சரியில்லை என்று திமுக கூறுவது ஏற்புடையது அல்ல. ஏனென்றால் திமுக பலமுறை ஆட்சி அமைத்துள்ளதோடு, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிலும் ஏற்கெனவே இருந்தவர்.
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக கூறியது. அப்போதும் பெட்ரோலிய பொருட்கள் விலையை எண்ணெய் நிறுவ னங்கள் தான் நிர்ணயம் செய் தன. இப்போது, விலையை குறைக் காமல் காரணம் சொல்லக் கூடாது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு கீழ் கொண்டு வந்தால் விலை குறையும். தவறு செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாஜக தடையாக இருக்காது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்புத் துறையைக் கொண்டு நடவடிக்கை எடுத் தால் அதனை எதிர்ப்போம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவே திமுக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் மணிமண்டபமும், அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரையும் தமிழக அரசு சூட்ட வேண்டும் என்றார்.