‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தில் இந்தியாவில் 8 சதவீதம் பெண்களே புதிய தொழில்முனைவோர்களாக இணைந்துள்ளதாகவும், பெண்கள் பங்களிப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் மத் திய அரசு ‘ஸ்டார்ட்அப் இந்தியா (தொடங்கிடு இந்தியா)’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல் வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில் முனை வோருக்கான உதவிகள், கடன் வசதி, புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கித் தரவும் அரசு முடிவு செய்துள்ளது.
கோவை கொடிசியா தொழில் காட்சி அரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபை, யங் இண்டியன்ஸ், சிஐஐ ஆகிய அமைப்புகள் சார்பில் ஸ்டார்ட் அப் இந்தியா, கண்காட்சி இரண்டாம் கட்ட விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசியதாவது:
இந்தியாவில் 8 சதவீதம் பெண்களே தொழில்முனைவோர் களாக உள்ளனர். இது வருந்தத்தக்க செய்தி. தொழில்துறையில் பெண் கள் பங்களிப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வரு கிறது. ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டத்தில் தொழில்முனைவோரை கட்டுப்படுத்தும் அமைப்பாக அரசு இருக்காது. மாறாக, அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக் கும் அமைப்பாக இருக்கும். அதேபோல், தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறையும். தொழில் நிறுவனங்களில் கீழ் மட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரும்.
கோவையில் இயற்கையாகவே தொழில்முனைவு நல்ல முறையில் இருக்கிறது. அதனால் இத் திட்டம் நல்ல பயனை ஏற்படுத்தும். கடந்த 13 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வந்தாலும் கூட, நடுத்தர மக்களின் வாங்கும் திறன், தேவை உள்ளிட்ட காரணங் களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
3 வருடத்துக்கு ஆய்வுகள் இருக்காது
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் சைலேந்திரசிங் பேசும் போது, ‘ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொழில் முனைவோர் பதிவு செய்யும் வழிமுறைகள் எளிமைப் படுத்தப்படும். ஒரே படிவம், ஒரே நுழைவு, ஒரே செயலாக்கம் என்ற அடிப்படையில் செல்போன் செயலி வெளியிடப்பட உள்ளது. தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெறு வதற்கான வழிமுறைகள் அனைத் தும் அதில் கிடைக்கும். அதேபோல், தொழிலில் நஷ்டமடைபவர்கள் எளிதில் இத் திட்டத்திலிருந்து வெளியேறவும் முடியும். இத்திட்டத்தில் வரும் புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.600 கோடி வரை நிதி ஒதுக்க ஒப்புதல் கொடுத்துள்ளனர். தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில், பதிவு செய்யப்படும் காலத்திலிருந்து 3 வருடத்துக்கு வரி, சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் பாதுகாப்பு, தொழிலகப் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த ஆய்வுகளும் இருக்காது’ என்றார்.
இந்த சந்திப்பின்போது, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன், கொடிசியா அமைப்பின் தலைவர் பொன்னுசாமி, இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.