சுந்தரமூர்த்தி தம்பிரான் 
தமிழகம்

புதிய மடாதிபதி 10 நாட்களுக்கு பிறகு தேர்வு

செய்திப்பிரிவு

தமிழகத்தின் மிகப் பழமையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மக்களிடம் சைவ சமய சித்தாந்தங்களையும், கருத்துகளையும் பரப்பும் வகையில் இந்த ஆதீனம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆதீனத்துக்கு இதுவரை 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர். 292-வது ஆதீனமாக 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வந்தார். 40 ஆண்டுகள் சைவத் தொண்டை சிறப்புறச் செய்தவர்.

இவரது மறைவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த அருணகிரிநாதர், இளைய சன்னிதானமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவரை 2019-ல் நியமித்துள்ளார். ஆதீனம் மரபுப்படி, இளைய சன்னிதானமாக இருப்பவர், அடுத்த ஆதீனமாக வர தகுதி படைத்தவர்.

இந்த அடிப்படையில் அருணகிரிநாதர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 10 நாட்கள் பல்வேறு அபிஷேகம் நடந்த பிறகுதமிழகத்தில் உள்ள பிற சைவமடாதிபதிகள் கூடி சுந்தரமூர்த்தி தம்பிரானையே 293-வது மதுரை ஆதீனமாகத் தேர்வு செய்வர் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT