தமிழகம்

சிறப்பாக பணிபுரிந்த தமிழக காவல் துறையினர் 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது

செய்திப்பிரிவு

தமிழக காவல் துறையினர் 24 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர்விருது வழங்கப்படுகிறது. இந்தஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள 24 காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருது,மாநில குற்ற ஆவணக் காப்பகஏடிஜிபி வினித்தேவ் வானகடே,தமிழ்நாடு சிறப்பு காவல்கமாண்டன்ட் (உளுந்தூர்பேட்டை) ஜெயவேல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுக்கு, விருதுநகர் எஸ்.பி. மனோகர், சென்னை காவல் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன், சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன், தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் (திருச்சி) ஆனந்தன், தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் (டெல்லி) செந்தில்குமார், சென்னை ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சிறப்பு காவல் (ஆவடி) துணை கமாண்டன்ட் சிவன், சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் எஸ்.பி. சுஷில்குமார் சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் நடராஜன், வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி ஜெயகரன், திருப்பத்தூர் க்யூ பிரிவு டிஎஸ்பி ராஜா காளீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கருப்பையா, சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பி கோபால், விருதுநகர் டிஎஸ்பி நமச்சிவாயம், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், சென்னை விஜிலன்ஸ் பிரிவுஆய்வாளர் டேவிட், சென்னைஎஸ்பிசிஐடி ஆய்வாளர் சதாசிவம், சென்னை எஸ்பிசிஐடி ஆய்வாளர் ராஜசீலன், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆய்வாளர் கவுரி, ஈரோடு சிறப்பு அதிரடிப் படைஉதவி ஆய்வாளர் சண்முகம், கோவை க்யூ பிரிவு உதவிஆய்வாளர் ரூபன், சென்னைலஞ்ச ஒழிப்புத் துறை உதவி ஆய்வாளர் ரங்கசாமி ஆகியோரும்இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT