தமிழகம்

வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற் றும் வகையில் வலுவான கூட்ட ணியை பாஜக அமைக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் 21-வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து உடனடியாக முடிவு செய்யும் நிலையில் பாஜக இல்லை. பல்வேறு கட்சிகளுடனும் பாஜக தொடர்பில் உள்ளது. கூட்ட ணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. எனினும், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அளவுக்கு பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும். சட்டப்பேரவைக் கூட் டத் தொடரில் இருந்து தேமுதிக எம்எல்ஏ-க்களை நீக்கிய விவகாரத் தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றார்.

‘மது இல்லா தமிழகம், தரமான கல்வி, வளமான சமுதாயம்’ ஆகிய வற்றை வலியுறுத்தி நடைபெறும் இந்த மாநாட்டை, சுவாமி அகிலா னந்த மகராஜ் தொடங்கிவைத்தார்.

SCROLL FOR NEXT