தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 100-வது நாளை முன்னிட்டு சாத னைகளை துண்டு பிரசுரமாக வழங்க வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுகசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100-வது நாளை முன்னிட்டு அவர் நிறை வேற்றிய வரலாற்று சாதனைகள், பல்வேறு நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென் றடையும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டுகள் மற்றும் கிளைகள் தோறும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் சாதனையாக தமிழ்நாட்டில் முதன் முதலாக வேளாண் பட் ஜெட் இன்று தாக்கல் செய் யப்படுகிறது.
ஒரே மாதத்தில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் மற் றும் மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
பல துறைகளின் பெயர் தமிழில் மாற்றப்பட்டது. டெல்டாவிவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு ரூ. 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மக்கள் குறை தீர்க்கும் வகையில் தனி ஐஏஎஸ் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு மற்றும் அரசு இறுதி மரியாதை உத்தரவிடப்பட்டது, மக்களைத் தேடி மருத்துவம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது போன்ற எண்ணற்ற சாதனைகளை துண்டு பிரசுரமாக அச் சிட்டு,பொதுமக்களிடம் வழங்கிட வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.