500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அரசு அமைக்கும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
* புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
* மீன்வளத்துறைக்கு ரூ.1,149 கோடி ஒதுக்கீடு
* தமிழகத்தில் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தில் காடுகள் பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்த உள்ளது. நம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு மரம் நடவு திட்டம் அடுத்த 10 ஆண்டு காலத்துக்குள் செயல்படுத்தப்படும்.
* காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும் தணிப்பதும் தமிழகம் போன்ற கடலோர மாநிலத்துக்கு பெரிய சவாலாக உள்ளது.
* 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அரசு அமைக்கும்.
* இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்படும்.
* ஈர நிலங்கள் இயக்கம் அமைக்கப்படும். இதற்காக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.150 கோடி செலவிடப்படும்.