தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.
அதில் தமிழ் வளர்ச்சி குறித்த சில அறிவிப்புகள்:
* தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும் .
* தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.
* உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
* தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கபபடும்