தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; தேர்தல் பணியை உடனே தொடங்குங்கள்: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொருவாக்கும் முக்கியம் என்பதால் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, தேர்தல் பணியை உடனே தொடங்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளனர்.

விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சென்னையில்உள்ள அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கடந்த 11-ம்தேதி ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், எஞ்சியுள்ள திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய4 மாவட்ட நிர்வாகிகள்உடனான ஆலோசனைக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிதலைமையில் நேற்று காலை நடந்தது. இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘‘சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடப்பதால், அதற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. இதை நமக்கு சாதகமாக மாற்றநிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. எனவே, புதியஉறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் பணியைஇப்போதே தொடங்கினால், எளிதாக வெற்றி பெறலாம்’’ என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுரை கூறியதாக மாவட்ட நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT