தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பதவியில் (துணை இயக்குநர்) உள்ள 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆ.அனிதா, ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பி.ஏ.ஆறுமுகம், திருவள்ளூர் முதன்மைக் கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இவ்வாறு 37 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பள்ளிக்கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.