தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாங்கள் மாறவில்லை
பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறேன். ஆனால், அப்படி எந்தவொரு கட்சியும் இங்கு இல்லை. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்போது ஊடகங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்தோம். அந்த நிலை யில் இருந்து நாங்கள் இன்றும் மாறவில்லை. ஆனால், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க மறுக்கின்றன.
பலம் இல்லாதவர்கள், வலுவில்லாதவர்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர லாம். மக்களை நம்பியே பாமக தனித்து களம் இறங்குகிறது.
தனித்து போட்டியிட்ட கட்சி
அன்புமணியைப் பற்றி தமிழகத்தின் அனைத்து மூலைகளி லும் பேசுகின்றனர். 234 தொகுதி களிலும் பாமக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். பாமக பல தேர் தல்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.