பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதை முன்னிட்டு கோவை மாநகரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை தொழிலாளர் நல மருத்துவக் கல்லூரி மருத் துவமனை (இ.எஸ்.ஐ.) திறப்பு விழாவில் கலந்து கொள் வதற்காக பிரதமர் மோடி இன்று கோவைக்கு வருகிறார். மருத்து வமனை கட்டிடம் திறப்பு விழா வுக்குப் பின்னர், கோவை கொடிசியா திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரை யாற்ற இருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச் சாரத்தின்போது கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய மோடி, பிரதமரான பின்னர் கோவை வருவது இதுவே முதல்முறை.
சமீபத்தில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது பாதுகாப்புப் படை யுடன் ஆயுத மோதலும் நடத்தி வருவதால் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வரு கிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி கோவை வருகையின்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் ஏற்கெனவே மதக் கலவரம் காரணமாகக் குண்டு வெடிப்பு நடந்த இடம் என்பதாலும், ஐதராபாத் பல்கலைக்கழக மாண வர் ரோஹித் வெமுலா தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக, மோடியைக் கண்டித்து 22 சமூக மற்றும் பல்வேறு அமைப்புகள் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாலும் வரலாறு காணாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமரின் கோவை பயணம் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப் பட்ட பின்னர், சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்.ஐ.டி.) 3 நாட்களுக்கு முன்னரே கோவை வந்துவிட்டது. கோவையில் பிரதமர் வந்து செல்லும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என்பது குறித்து அவர்கள் வகுத்துள்ள வியூகங்களின் அடிப்படையில் உள்ளூர் போலீஸார் ஒருங்கி ணைப்பு அளித்து வரு கின்றனர்.
5 ஐ.ஜி-க்கள் தலைமையில் 20 எஸ்.பி-க்கள், 60 டி.எஸ்.பி-க்கள் உட்பட 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
பிரதமர் வந்து செல்லும் இடங்களைச் சுற்றி 7 அடுக்கு பாது காப்பு மேற்கொள்ளப்படுவதாக வும், தற்காலிகப் புறக்காவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வும் போலீஸார் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவை மாநகரிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகமும் 4 நாட்களுக்கு முன்னரே போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட வில்லை.
ஊழியர்களும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்ட னர். ஸ்கேன் கருவி, மோப்ப நாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
‘‘கோவைக்கு விமானம் மூலமாக பகல் 2.30 மணிக்கு வரும் மோடி, கார் மூலமாக அங்கிருந்து நேரடியாக அவிநாசி சாலையில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கு ஓய்வுக்குப் பின்னர் 3.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் 4.20 மணி வரை கலந்து கொள்ளும் அவர், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடிசியா திடலில் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மாலை 4.30 மணிக்குச் செல் கிறார். அங்கு மாலை 5.15 மணி வரை உரையாற்றுகிறார். பின்னர் விமானம் மூலமாக 5.45 மணிக்கு புதுடெல்லி புறப்பட்டுச் செல்கிறார் ’’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறும்போது, "பிரதமர் வரு கையை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்" என்றார்.