சிவகங்கை மாவட்டத்தின் திருப் புவனம் பகுதியில் தமாகா-வின ரின் இல்லத் திருமணங்களை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் விலையை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அவ்வாறு விலை உயருமேயானால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பால் விலையை வரையறைக்குள் வைத்து பொதுமக்கள் மீது சுமையை ஏற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.
மக்களை நோக்கி மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் மூலம் இதுவரை 148 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்று மக்களை, தொண்டர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்து உள்வாங்கி வருகிறேன். அதன் அடிப்படையில் என்னுடைய சுற்றுப் பயணத்தின் இறுதியில் அடுத்த மாதம் தேர்தலுக்கான வியூகம் அறிவிக்கப்படும்.
தற்போது தேர்தலை சந்திக் கும் வகையில் தமாகா தயார் நிலை யில் உள்ளது. எல்லா தொகுதி யிலும் எதிர்பார்ப்புக்கு மேல் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னணித் தலைவர்கள் மட்டு மில்லாமல், இளைஞர்கள், பெண் கள் நம்பிக்கையோடு விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமாகா வெற்றிக் கூட்டணியில் இடம்பெறும். அது மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும். திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகளா? இல்லையா என்பது தேர்தலிலே வாக்குச்சீட்டு மூலம் தெரியவரும் என்றார்.
அப்போது சிவகங்கை மாவட் டத் தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. ராம்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.