தமிழகம்

பிரச்சாரத்தை தொடங்கியது மக்கள் நலக் கூட்டணி: விஜயகாந்த், வாசனுக்காக காத்திருக்கவில்லை - வைகோ தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நலக் கூட்டணி தொடங்கியுள்ளது. விஜயகாந்த், ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அவர்களுக்காக காத்திருக்காமல் பயணத்தை தொடர்கிறோம் என அக்கூட்டணியின் ஒருங்கிணைப் பாளர் வைகோ கூறினார்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாடு, மிகப் பெரிய எழுச்சியை அளித்துள் ளது. குறைந்தபட்ச செயல்திட் டத்தை முன்வைத்து எங்கள் பிரச் சாரத்தை தொடங்கவுள்ளோம். புதுச்சேரியில் இன்று (நேற்று) மாலை மக்கள் நலக்கூட்டணியின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையடுத்து 7-ம் தேதி (இன்று) கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறையிலும், 8-ம் தேதி தஞ்சை, திருவாரூரிலும், 9-ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

திமுக, அதிமுகவை தோற்கடிப் பதுதான் எங்கள் எண்ணம். அவ்விரு கட்சிகளும் பணத்துடன் தான் கூட்டணி வைத்துள்ளன. நாங்கள் எண்ணத்தாலும் கருத் தாலும் ஒற்றுமை பெற்று இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் பாக அறிவிக்க மாட்டோம். தேர்தலுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் அதை முடிவு செய்வார்கள். இதை திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார்.

மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்கும். விஜயகாந்த், வாசனுக்கு அழைப்பு விடுத்துள்ள போதி லும், அவர்களுக்காக காத் திருக்காமல் எங்கள் பயணத்தை தொடர்கிறோம். நான் தேர்த லில் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய் யும். மக்கள் நலக்கூட்டணி சார்பில் விருப்ப மனு பெறுவதை அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT