ஐஆர்சிடிசி நிறுவனம் ரயில் பயணிகளின் வசதிக்காக 25 வகையான தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ரயில் பயணிகளின் வசதிக்காக புதிதாக 25 வகையான சுவைகளில் தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்ரக் துளசி, குல்ஹத், ஹரிமிர்ச், ஹாம் பப்பட், தேன், இஞ்சி, எலுமிச்சை ஆகிய சுவைகள் இவற்றில் அடங்கும்.
மேலும், பயணிகள் இந்த தேநீரை ஆர்டர் செய்து பெறுவதற்காக மொபைல் ஆப்பையும் (செயலி) அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, ஐஆர்சிடிசி நிறுவனம் பிரபல தேநீர் நிறுவனமான சாயோஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன், பயணிகள் இணையதளம் வழியாக ரூ.300-க்கு மேல் மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்தால் அவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என ஐஆர்சிடிசி நிறுவனத்தின் தலைவர் அருண்குமார் மனோச்சா தெரிவித்துள்ளார்.