கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் செப்.1 முதல் ஆன்லைனில் வாடகைசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்துஇணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான மனைகள், கட்டிடங்களின் குத்தகைதாரர், வாடகைதாரர்களிடம் இருந்துஅந்தந்த கோயில் நிர்வாகங்களால் குத்தகை, வாடகையை ரொக்கமாகவும், காசோலை மூலமாகவும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.கோயில் அசையா சொத்துகள் தொடர்பான கேட்பு வசூல் நிலுவை விவரங்களை ஆன்லைன் வழியே பதிவேற்றம் செய்து குத்தகை, வாடகை தொகையை வசூலித்திட ஏதுவாக தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலமாக ஒரு மென்பொருள் உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, செப்.1 முதல் வாடகை, குத்தகை வசூலிக்க புதிய ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். குத்தகை, வாடகைதாரர் பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் தொகையை கண்டிப்பாக செலுத்திட வேண்டும்என்ற விவரம் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.ஆன்லைனில் செலுத்தப்படும் தொகை குறித்தவிவரம், கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டில்தவறாமல் பதிவு செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.