திருச்சி நவலூர் குட்டப்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். திருச்சி திமுகவில் மு.க.அழகிரியின் ஆதரவாளர். வரும் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார். மு.க.அழகிரியே கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், எந்த நம்பிக்கையில் விருப்ப மனு கொடுத்தீர்கள் என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
1984 முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் உள்ளேன். மு.க.அழகிரி மீது தனிப் பற்று உண்டு. திமுக- காங்கிரஸ் கூட்டணி தோற்கும் என்று ஏதோ கோபத்தில்தான் அழகிரி கூறியுள்ளார். ஆனால், வேட்பாளர் பட்டியல் இறுதியாவதற்கு முன்பே சமாதானம் அடைந்து கட்சிக்குள் இருப்பார். அப்போது, அவரது ஆதரவாளர் என்ற முறையில் எனக்கு வாய்ப்பு வாங்கித் தருவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.