தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் 7 லட்சத்து 72 ஆயிரம் பெண்களுக்கு ரூ.2 ஆயிரத்து 537 கோடி திருமண உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்க வும், இளம்வயதில் திருமணம் செய்வதை தடுக்கவும் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பெண் களின் கல்வித்தகுதியின் அடிப் படையில் அவர்களுக்கு நிதியுதவி கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் இதுவரை யில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 633 பெண்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 537 கோடியே 74 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திருமாங்கல்யத்துக்கென ரூ.786 கோடியே 64 லட்சம் மதிப்பில் தங்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.27 கோடியே 35 லட்சம் செலவில் மாநிலத்தில் உள்ள 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. முதியோருக்கும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வழங்கப்படும் மாதாந்திர சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கு ரூ.19 ஆயிரத்து 2014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இதற்கு ரூ.3,820 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.