திமுக தலைவர் கருணாநிதி கேள்வி - பதில் வடிவில் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் மீது சட்டப்பேரவை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுக ஆட்சியின் கடைசி பே ரவைக் கூட்டம் இன்னும் 4 நாட்களே நடைபெறும் என்ற நிலையில், மக்கள் கொடுத்த வரிப்பணத்தை வீணாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது அவசியம்தானா?
அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் பற்றி இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்பட வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து பிற்பகல் வரை எழிலக வளாகத்தில் காத் திருந்ததாகவும், ஆனால் அறிவிப்பு எதுவும் வராததால், அங்கு திரண் டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் தலைமைச் செயலகம் நோக்கி சென்றபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்துச் சென்று குண்டுகட்டாக வேனில் ஏற்றி கைது செய்ததாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வந்துள்ளன.
அரசு அலுவலர்கள் அரசின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிட்டு, அவர்களை ஏதோ விரோதிகள் என எண்ணி தமிழக அரசு மிக வும் அலட்சியமாகவும், பகைமை யோடும் நடத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக சட்டப் பேரவையில் உள்ள கட்சிகளின் குழுத் தலைவர்கள் முன்னிலையில், போராடுகின்றவர்களின் பிரதிநிதி களை அழைத்துப் பேசி அமைதிப் படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்க வும் முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு பரிவோடு செவிமடுத்து ஏற்கக் கூடியதைக் குறைந்தபட்சம் 110-வது அறிக்கை வாயிலாகவாவது அறிவிக்க முன்வர வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மாநகராட்சிப் பகுதியில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மலிவு விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட் டத்துக்கு 2 ஆண்டு கழித்து இப்போதுதான் முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத் துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பது அரசின் கண்துடைப்பு அறிவிப்பு. இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டே மத்திய அரசு 3 விளக்கங்கள் கேட்டு கருத்துருவை மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பியது. தமிழக அரசோ, 2016 வரை 3 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.