மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சமின்றி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி 24-வது வார்டு பொதுமக்களிடம் மனுக் களைப் பெற்ற அமைச்சர் பி.மூர்த்தி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:
அதிமுகவினரால் கைவிடப்பட்ட முதியோர்களின் வீடுகளுக்கே சென்று மனுக்களைப் பெற்றுள் ளோம். இதுவரை 2 ஆயிரம் மனுக் கள் வந்துள்ளன. தகுதியான அனைவருக்கும் 3 மாதங்களில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மாநகராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி மேலும் விரைவுபடுத்தப்படும். விரைவில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும். இதற்கான கட்டமைப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சமின்றி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, குடியிருப்போர் சங்கத் தலைவர் சித்திரவேல் பாண்டியன் தலை மையில் நிர்வாகிகள் அமைச்சரை வரவேற்றனர்.
முன்னதாக மாற்றுக் கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர்.