தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் இருந்த முச்சந்தி இசக்கியம்மன் கோயிலை மாநகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். 
தமிழகம்

சாலை விரிவாக்கம் பணிக்காக தூத்துக்குடியில் கோயில் இடித்து அகற்றம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் முச்சந்தி இசக்கியம்மன் கோயில், சுடலை ஆண்டவர் கோயில் இருந்தது. ஜெயராஜ் சாலையை ஸ்மார்ட் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலையில் இருந்த கோயிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் முச்சந்தி இசக்கியம்மன் கோயிலை இடிக்கும் பணி தொடங்கியது. மாநகராட்சி உள்ளூர் திட்ட குழுமம் பொறியாளர் ரெங்கநாதன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ராமச்சந்திரன், காந்திமதி ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கோயில் முழுமையாக இடிக்கப்பட்டது. சிலைகள் சேதமடையாமல் அகற்றப்பட்டன. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT