`கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன்’ என நேற்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
`சட்டப்பேரவையில் அதிமுகவின் செயல்பாடு நல்ல விதமாகத்தான் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளை எதிரிகளாக பார்க்கும் நிலை இன்னும் உள்ளது. அதிமுக தனித்துப் போட்டியிடும் என்ற செய்தி வருவதால்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்’ என்றார் அவர்.