அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம் 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், அண்ணா அறிவாலயத்தில் அந்தந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப். 15-க்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்மாவட்டங்களில் தேர்தலை நடத்த மநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, 9 மாவட்டச் செயலாளர்களுடன் இன்று (ஆக. 08) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், அம்மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படி தயாராவது, பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT