தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்த அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய கைத்தறி தினம் நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘அனைவருக்கும்தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள். நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் நெசவுத்தொழில் மென்மேலும் சிறப்புற, நெசவாளர் நலன் காக்கும் இந்த அரசின் நெஞ்சம் நிறைந்த தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள். கைத்தறி ஆடையை உடுத்துவோம். அதன்பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.