தமிழகம்

தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆடி அமாவாசை, ஆடிப்பூரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அடுத்த 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 8-ம் தேதி (இன்று) ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை, 11-ம் தேதி ஆடிப் பூரம் ஆகிய நாட்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் மக்கள் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT