தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நேற்று கூறியதாவது:
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள தரத்துக்கு ஏற்பவிளையாட்டு மைதானம் அமைத்துபயிற்சி அளிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் சென்னையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 இடங்களில்விளையாட்டு அகாடமி அமைக்கப்பட உள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வதற்கு என தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி, கிராம அளவில்பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி தரப்படும். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து குறைந்தது 50 வீரர்கள் பங்கேற்பர். அவர்கள் அதிக பதக்கங்கள் பெறும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.