திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்து, அவர்களை சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கோ, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் அரசுக்கோ பெருமையாகாது.
அதிலும், அண்மைக்காலம் வரைதிறந்த சிலைகளாக இருந்த பெரியார்சிலைகளுக்கும்கூட, கடந்த ஆட்சியில் சில விஷமிகளின் செயல்களைத் தடுக்க சரியான வழி என்று கருதி, கூண்டு போட்டனர்.
எப்போதோ, எங்கோ நடந்த அசம்பாவிதங்களுக்கு, இது சரியான மாற்று வழி அல்ல. மாறாக, கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தலாம். அதனால் குற்றங்களும் குறைய வாய்ப்பு ஏற்படும்.
எனவே, தலைவர்கள் அனைவருக்கும் 75-ம் ஆண்டு விடுதலை நாளில், கூண்டுகளை அகற்றி, சுதந்திரமாக காட்சியளிக்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.